/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெண்ணுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
/
பெண்ணுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
பெண்ணுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
பெண்ணுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
ADDED : டிச 27, 2024 02:52 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே டூவீலரில் பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பது போல் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி கண்ணன் 39, என்பவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா செங்குளத்தைச் சேர்ந்தவர் கண்ணன்.  இவர் 2021 அக்.,4ல் தனது கிராமத்தில் இருந்து டூவீலரில்  திருப்புவனத்திற்கு சென்றார். அப்போது பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த அதே ஊரைச் சேர்ந்த 36 வயது பெண்ணை, தனது டூவீலரில் லிப்ட் கொடுப்பது போல் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.
ஏ.முக்குளம் போலீசார் கண்ணனை கைது செய்தனர்.  ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் கண்ணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.

