/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் பழிக்குப்பழியாக தொழிலாளி வெட்டிக்கொலை
/
சிவகாசியில் பழிக்குப்பழியாக தொழிலாளி வெட்டிக்கொலை
ADDED : மார் 18, 2025 01:16 AM

சிவகாசி; விருதுநகர் மாவட்டம், சிவகாசி, திருத்தங்கல் ஆலாவூரணியைச் சேர்ந்தவர் சுரேஷ், 27; கூலி தொழிலாளி. குணசேகரன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த சுரேஷ், சிவகாசி முனீஸ் நகரில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு வீட்டில் இருந்த சுரேஷை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். மாரனேரி போலீசார் இவ்வழக்கில் திருத்தங்கல், சரஸ்வதி நகரைச் சேர்ந்த மதனகோபால், 23, தனசேகரன், 23, சூர்யா பிரகாஷ், 19, ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
சுரேஷ் 2024 ஜனவரியில் முன் விரோதத்தில் மதனகோபாலை கொலை செய்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். மதனகோபால் தப்பி ஓடியதால் அவரது அண்ணன் குணசேகரனை வெட்டிக் கொலை செய்தார்.
அந்த வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த சுரேஷை, மதனகோபால் தன் நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.