நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தளவாய்புரம்: ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லுார் சாவடி தெருவை சேர்ந்த அய்யனார் மகன் கணேசன் 45, கட்டட தொழிலாளி. திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நேற்று மாலை பணி முடிந்து தேசிகாபுரம்- தெற்கு வெங்காநல்லுார் ரோட்டில் சென்றபோது எதிரே வந்த வேன் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் (ஹெல்மெட் அணியவில்லை) உயிரிழந்தார். தளவாய்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.