நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டியில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு லயன்ஸ் கிளப் ஆப் பர்பெக்ட் சார்பில், நீரிழிவு பரிசோதனை, குளுக்கோஸ் பரிசோதனை தலைவர் அழகர்சாமி தலைமையில் நடந்தது.
செயலாளர் விக்டர் வரவேற்றார். அரசு டாக்டர் பிருந்தா முகாமை துவக்கி வைத்து, நோயாளிகளுக்கு பரிசோதனை செய்தார். நிர்வாகிகள் சிவக்குமார், மணிகண்டன், முனீஸ்வரன், பிரின்ஸ், தங்கபாண்டியன், பாலசுப்பிரமணி, முகமது பரக்கத் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார்.