ADDED : ஆக 03, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் எஸ்.ஆர்.என்.எம். கல்லுாரியில் தமிழ் துறை ,திரை மன்றம்,கரிசல் இலக்கிய கழகம் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சாத்துார் கிளை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
கல்லுாரி ஆட்சி மன்ற உறுப்பினர் பத்மநாபன் தலைமை வகித்தார்.இணைச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.பேராசிரியர் ஸ்ரீதேவி வரவேற்றார். முதல்வர் கிருஷ்ணவேணி வாழ்த்தினார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அறம் பேசினார்.ஆவணப்பட இயக்குனர் அமுதன் குறும்பட இயக்குனர் முத்து இணைந்து விழிப்புணர்வு தரும் வகையில் குறும்படம் மற்றும் ஆவணப் படங்களை திரையிட்டு மாணவர்களுடன் உரையாடினர். பேராசிரியர் அபிலாஷா நன்றி கூறினார்.