
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் தேவாரப் பாடல்களுக்கு நடனப் பள்ளி மாணவிகள் நடனமாடி உலக சாதனை முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்பாட்டிலைட் வேர்ல்ட் உலக சாதனை முயற்சியாக மதுரை ஸ்ரீ கலாகேந்திரா ஆர்ட்ஸ் அகாடமி சார்பில், நடன பள்ளி மாணவிகள் தேவாரப் பாடல்களுக்கு நடனம் ஆடினர். அகாடமி இயக்குநர் ஸ்ரீ அம்சினி தலைமையில் மாணவிகள் 14 பாண்டிய சிவஸ்தலங்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் பயணம் செய்து, நடனமாடி வருகின்றனர். , 10 வது ஸ்தலமான திருச்சுழி கோயிலில் நேற்று நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை அகாடமி குழுவினர் செய்தனர்.

