/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பழுதாகும் தண்ணீர் தொட்டிகளால் பரிதவிப்பு: கோடையில் புழக்கத்திற்கும் திண்டாட்டம்
/
பழுதாகும் தண்ணீர் தொட்டிகளால் பரிதவிப்பு: கோடையில் புழக்கத்திற்கும் திண்டாட்டம்
பழுதாகும் தண்ணீர் தொட்டிகளால் பரிதவிப்பு: கோடையில் புழக்கத்திற்கும் திண்டாட்டம்
பழுதாகும் தண்ணீர் தொட்டிகளால் பரிதவிப்பு: கோடையில் புழக்கத்திற்கும் திண்டாட்டம்
ADDED : ஏப் 16, 2024 03:42 AM

மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை உள்பட நகராட்சிகளில் மக்களின் புழக்கத்திற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய எம்.எல்.ஏ., நிதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மோட்டார்கள் பொருத்தி தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. இதை அப்பகுதி மக்களே பராமரித்து தண்ணீர் பிடித்து வந்தனர். துவக்கத்தில் உபயோகமாக இருந்த இது, சில மாதங்களில் செயல்படாமல் போனது.
அடிக்கடி மோட்டார் பழுது, தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் இது தோல்வி திட்டம் போலாகி விட்டது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் இன்றும் இது செயல்பாட்டில் உள்ளது. அவற்றை பழுது நீக்குவதில் நகராட்சி ஊழியர்கள் தான் அலட்சியம் செய்கின்றனர். இதனால் கோடை நேரத்தில் வாரக்கணக்கில் புழக்க தண்ணீருக்காக மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கும் சூழல் உள்ளது.
கோடை வந்தாலே மாவட்டத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் சப்ளை என்ற சூழல் உள்ளது. தற்போது முதற்கட்ட தாமிரபரணி திட்டம் கொடுக்கப்பட்டாலும் நகரின் பல பகுதிகளை அது சென்றடையவில்லை. இதனால் நகராட்சி குடிநீரை குடிப்பதற்கும், மோட்டார் பொருத்திய தண்ணீர் தொட்டியின் நீரை பாத்திரம் கழுவ, துணி துவைக்க என புழக்கத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
விருதுநகர் நகராட்சி, சிவகாசி மாநகராட்சி யில் பல பகுதிகளில் இது தான் நிலை. கோடை நேரத்தில் இது போன்ற பழுதை கவனிக்காமல் விடுவது மக்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அருப்புக்கோட்டை நகராட்சியின் 36 வார்டுகளில் பாதி தண்ணீர் தொட்டிகள் செயல்படாமல் உள்ளது. நகராட்சி நிர்வாகங்கள்இதை கண்காணித்து தீர்வு வேண்டும்.
கோடை நேரம் என்பதால் குறைந்த பட்சம் செயல்படும் தொட்டிகளிலாவது மோட்டார் பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய முன்வர வேண்டும்.

