நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கடந்த இரு நாட்களாக சதுரகிரி மலைப்பகுதியில் தீப்பிடித்ததன் காரணமாக பக்தர்கள் அனுமதிக்க படாத நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால் தீ முற்றிலும் அணைந்தது.
இதனையடுத்து நேற்று காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
கோயிலில் சுவாமிகளுக்கு நடந்த அமாவாசை வழிபாட்டை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.