ADDED : அக் 29, 2024 04:33 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ் இலக்கிய பெருமன்றத்தின் 256வது எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது.
தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். சந்திரசேகர் முன்னிலை வகித்தார். ஆசிரியை பத்மா வரவேற்றார்.
எழுத்தாளர் ரமேஷின் படைப்புகளை விமர்சித்து எழுத்தாளர்கள் சிவனனைந்த பெருமாள், சிவனேசன், சக்தி மகேஸ்வரி, ராஜேஸ்வரி, சோமசுந்தரம், காளியப்பன் பேசினர். ரமேஷ் ஏற்புரையாற்றினார். கூட்டத்தில் நெசவாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் கணேசன் கவுரவிக்கப்பட்டார். துணை செயலாளர் அடைக்கலம் கூறினார்.
