ADDED : பிப் 02, 2025 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் நூலகத்தில் 259வது எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் தலைவர் கோதையூர் மணியன் தலைமையில் நடந்தது.
மோகன் கந்தசாமி இசை பாடல்கள் பாடினார். எழுத்தாளர் பாண்டியராஜனின் படைப்பை விமர்சித்து புலவர் சிவனைந்த பெருமாள், பேராசிரியர் சிவனேசன், புலவர் காளியப்பன் பேசினர். எழுத்தாளர் பாண்டியராஜ் ஏற்புரையாற்றினார். மறைந்த எழுத்தாளர் எஸ். எஸ். மணியத்திற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நிர்வாகி அடைக்கலம் நன்றி கூறினார்.