UPDATED : மே 01, 2026 04:16 PM
ADDED : மே 01, 2026 03:00 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் தமிழ் இலக்கிய பெருமன்றம் சார்பில் 274 வது எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது. பென்னிங்டன் கமிட்டி துணை தலைவர் முத்துப்பட்டர் தலைமை வகித்தார். இலக்கிய பெருமன்ற தலைவர் கோதையூர் மணியன் வரவேற்றார். நூலகர் கந்தசாமி இசை பாடல்கள் பாடினார்.
கனடா நாட்டு எழுத்தாளர் புகாரியின் படைப்புகளை விமர்சித்து பேராசிரியர் சிவனேசன், கவிஞர் சுரா, சிவனணைந்த பெருமாள், காளியப்பன் பேசினர். புகாரி ஏற்புரையாற்றினார். அவருக்கு கவிச்செம்மல், செந்தமிழ் வேந்தர் பட்டம் வழங்கப்பட்டது. கவிஞர் ஸ்ரீ சக்தி தொகுப்புரையாற்றினார். துணை செயலாளர் அங்குராஜ் நன்றி கூறினார்.
