ADDED : ஏப் 30, 2025 06:38 AM
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ் இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் எழுத்தாளர் முப்பெரும் விழா நடந்தது.
தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். சந்திரசேகர் வரவேற்றார். எழுத்தாளர் சாத்தூர் கணேசனின் படைப்புகளை பாராட்டி எழுத்தாளர்கள் சிவனேசன், சுரா, சிவனணைந்த பெருமாள், ஜெயலட்சுமி, லட்சுமி பிரபா காளியப்பன் பேசினர். கணேசன் ஏற்புரையாற்றினார்.
சிறுவர் இலக்கிய விழா பள்ளி தாளாளர் பெரிய மகாலிங்கம் தலைமையில் நடந்தது. மாணவர்களுக்கு இளம் பாரதி விருது வழங்கப்பட்டது.
எழுத்தாளர் கோதையூர் மணியனுக்கு தமிழ் இலக்கிய சேவை செம்மல் விருதினை, லிங்கோன் புக் ஆப் வேர்ட் ரெக்கார்டர் மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ் குமார் வழங்கினார். பென்னிங்டன் கமிட்டி நிர்வாகி முத்துப்பட்டர், நெசவாளர் முன்னேற்ற சங்க தலைவர் கணேசன், எழுத்தாளர்கள் பாராட்டினர். அங்குராஜ் நன்றி கூறினார்.