/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சவேரியார் சர்ச் திருவிழா கொடியேற்றம்
/
சவேரியார் சர்ச் திருவிழா கொடியேற்றம்
ADDED : நவ 23, 2024 06:15 AM

விருதுநகர்; விருதுநகர் பாண்டியன் நகரில் சவேரியார் சர்ச்சின் 25வது ஆண்டு வெள்ளி விழா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதை முன்னிட்டு மாலை 6:00 மணிக்கு திருச்சி பிரான்சிஸ் தி சேல்ஸ் சபையின் தென்கிழக்கு மாகாண சபை அதிபர் பாதிரியார் பேட்ரிக் ஜெயராஜ், பாண்டியன் நகர் பாதிரியார்கள் லாரன்ஸ், மரிய ஜான் பிராங்கிளின், விருதுநகர் எஸ்.எஃப்.எஸ்., பள்ளி முதல்வர் ஆரோக்கியம் முன்னிலையில் பிரான்சிஸ் சவேரியார் திரு உருவம் பொறித்த கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நவநாள் திருப்பலியும், மறையுரையும் நடந்தது.
முக்கிய நிகழ்வாக 9ம் நாள் நவ. 30ல் மாலை 6:30 மணிக்கு மதுரை உயர்மறை மாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. அதனை தொடர்ந்து மிக்கேல் அதிதூதர், புனித லூர்து அன்னை, புனித பிரான்சிஸ் சவேரியார் திரு உருவம் அலங்கரிக்கப்பட்ட மின் அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது.
10ம் நாள் டிச. 1 ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நாலாட்டின்புதுார் பாதிரியார்கள் ஜெரி லூயிஸ், நவீன் அடிகளார், ஸ்டீபன் சேவியர் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் மறையுரையும் திவ்ய நற்கருணை பவனியும் நடக்கிறது. அதை தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது.