ADDED : அக் 27, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: - ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மஞ்சள் பை பயன்பாட்டை அதிகரிப்பது குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன் தலைமையில், கமிஷனர் குமார் முன்னிலையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மக்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
பின் ஆண்டாள் கோயில் ரத வீதிகளில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இதில் சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், துாய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், மாசு கட்டுப்பாட்டு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

