/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மீண்டும் மஞ்சள் தோள்பட்டை புலி வண்டு
/
மீண்டும் மஞ்சள் தோள்பட்டை புலி வண்டு
ADDED : அக் 13, 2025 05:44 AM

விருதுநகர் : ராஜபாளையத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மஞ்சள் தோள்பட்டை புலி வண்டு என்று அழைக்கப்படும் அரிய வகை'சிசிண்டெலா ஆங்குலிகோலிஸ்' புலி வண்டு மீண்டும் கண்டறியப்பட்டது.
ராஜபாளையத்தில் பட்டாம்பூச்சிகள், பறவைகள், மரங்கள், தட்டான்பூச்சிகள், புலி வண்டுகள், காட்டுப்பூக்கள் போன்றவற்றை ரோர் அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. இவர்களது புலிவண்டு பற்றிய ஆய்வில் இந்த மஞ்சள் தோள்பட்டை புலிவண்டு கண்டறியப்பட்டுள்ளது. இதே இனம் கடைசியாக 2014 அக்.,ல் இப்பகுதியில் பதிவு செய்யப்பட்டது. 2014 ல் பார்த்த அதே இடத்தில் இருந்து சில கி.மீ.,க்குள் இந்த இனத்தின் மூன்று வண்டுகள் கண்டறியப் பட்டன.
இந்த ஆய்வின் போது அதை சுற்றிய பகுதிகளில் ஜான்சீனியா வெஸ்டிபிளிகாட்டிகா, சிலிண்டெரா செவெரினி, லோஃபிரா கான்செல்லாட்டா, லோஃபிரா கேட்டனா உள்ளிட்ட பல புலி வண்டு இனங்களையும் பதிவு செய்தனர். 1900ல் ஜார்ஜ் ஹார்ன் என்பவரால் ஜெர்மனியில் இந்த அரிய புலி வண்டின் பெண் மாதிரிபாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் இருந்து தான் இதன் பண்புகளை எடுத்து கூறு கின்றனர்.
இந்த இனத்தின் ஆரம்ப கால பதிவுகள் புதுக்கோட்டை (1973, 86), பொள்ளாச்சி (1983), பாலக்காடு (1983) காணப்பட்டுள்ளன. 31 ஆண்டுகளுக்குப் பிறகு 2014ல் ராஜபாளையத்திலும், சமீபத்தில் திண்டுக்கல் அய்யலுார் (2024 ஜூலை), மதுரை உசிலம்பட்டி (2024 செப். ), ஈரோடு பண்ணாரி (2025 ஆக. ) ஆகிய இடங்களிலும் காணப்பட்டது. இந்த ஆய்வுகள் மூலம்இந்த புலி வண்டுகள் இப்பகுதி முழுவதும் சிதறி ஆங்காங்கே அமைதியாக வாழ்ந்து வருவதைக் குறிக்கின்றன. ராஜபாளையத்தில் மீண்டும் 11 ஆண்டுகளுக்கு பின் கண்டறியப்பட்டுள்ளது.இந்தப் புதிய பதிவு புலிவண்டு ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கமளித்துள்ளது.
ஆய்வாளர்கள் சரண், சந்தோஷ், விஷ்ணு சங்கர், வினோத் ப்ரணவ், பாண்டியராஜ் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றனர். இவர்கள் கூறும் போது, புலிவண்டு பற்றி படிக்கவும், மாவட்டத்தின் பல்லுயிர் தன்மை பற்றி தெரிந்துக் கொள்ளவும் 80726 07969 என்ற எண்ணில் அழைக்கலாம், என்றனர்.