
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் சுப்பையா நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
அறக்கட்டளை துணை தலைவர் தர்மராஜன், தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி ஆகியோர் யோகா செய்து காட்டினர். மூச்சு பயிற்சி, சூரிய வணக்கம், உட்கட்டாசனம், அர்த்த சக்ராசனம் உள்ளிட்ட யோகா பயிற்சிகளை மாணவர்களை செய்ய வைத்து அவர்களும் செய்தனர்.