ADDED : டிச 02, 2024 05:05 AM
ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் சூளை விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.இ.பள்ளியில் மாநில அளவிலான யோகாசன போட்டி, நோபல் உலக சாதனை நிகழ்ச்சியும் நடந்தது.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 45 நிமிடம் சூரிய நமஸ்கார யோகா செய்தனர்.
பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது.
தாளாளர் இன்பராஜ் தலைமை வகித்தார். முதல்வர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்.
தமிழக யோகா ஸ்போர்ட்ஸ் வளர்ச்சி கழக மாநில செயலாளர் மாரியப்பன், யோகா அகாடமி மாநில துணை தலைவர் சந்தனகுமார், செயலாளர் சுந்தர், நோபல் உலக சாதனை அமைப்பு பிரதிநிதி பழனி ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். ஏற்பாடுகளை பயிற்சியாளர் லட்சுமி செய்திருந்தார்.