/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கூடுதல் அலுவலர்களை நியமிக்க வேண்டும்

ADDED : ஆக 12, 2025 11:28 PM
சிவகாசி: அதிக மனுக்கள் வரும் துறைகளில் கூடுதல் பணியாளர்களை நியமித்து, மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என அமைச்சர் தங்கம் தென்னரசு செங்கமலநாச்சியார்புரத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
முகாமில் அமைச்சர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இ-சேவை மையம் பிரிவில் இரு பணியாளர்கள் மட்டுமே உள்ளதால் சம்பத்தப்பட்ட அதிகாரிகளை அழைத்த அமைச்சர், இ-சேவை மையம் உட்பட அதிக மனுக்கள் வரும் துறைகளில் கூடுதல் பணியாளர்களை நியமித்து, மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். எம்.எல்.ஏ அசோகன், மேயர் சங்கீதா, பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.