/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உங்கள் ஊராட்சி சேதமடைந்த அரசு கட்டடங்கள் மயான ரோடு : கஷ்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் வடக்கு கரிசல்குளம் ஊராட்சி மக்கள்
/
உங்கள் ஊராட்சி சேதமடைந்த அரசு கட்டடங்கள் மயான ரோடு : கஷ்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் வடக்கு கரிசல்குளம் ஊராட்சி மக்கள்
உங்கள் ஊராட்சி சேதமடைந்த அரசு கட்டடங்கள் மயான ரோடு : கஷ்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் வடக்கு கரிசல்குளம் ஊராட்சி மக்கள்
உங்கள் ஊராட்சி சேதமடைந்த அரசு கட்டடங்கள் மயான ரோடு : கஷ்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் வடக்கு கரிசல்குளம் ஊராட்சி மக்கள்
ADDED : ஜூன் 24, 2025 03:00 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியதிற்கு உட்பட்ட வடக்கு கரிசல்குளம் ஊராட்சியில் பயணியர் நிழற்குடை இல்லாமல் சிரமம், சேதமடைந்த மேல்நிலைப்பள்ளி , மாணவர் விடுதிகள், ஊராட்சி அலுவலக கட்டடம், மயான ரோடு, வாடகை கட்டத்தில் இயங்கும் நூலகம் என பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து பெருமாள் தேவன் பட்டி செல்லும் ரோட்டில் அமைந்துள்ள இந்த கரிசல்குளம் ஊராட்சியில் மெயின் ரோட்டில் இருந்து கிராமத்திற்கு செல்லும் ரோட்டின் இருபுறமும் மரங்கள் வளர்ந்து அழகுபட இருந்தாலும், மெயின் ரோட்டில் பயணியர் நிழற்குடை இல்லாமல் அப்பகுதி மக்கள் மழைக்கும் வெயிலுக்கும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பல ஆண்டுகளாக செயல்படும் நூலகத்திற்கு சொந்த கட்டடம் இல்லாத நிலை காணப்படுகிறது. மயானத்திற்கு செல்லும் தார் ரோடு தற்போது சேதம் அடைந்து வருகிறது.
அரசு மேல்நிலைப் பள்ளியின் பழைய கட்டடம் நன்றாக உள்ள நிலையில் புதிய கட்டடத்தில் ஜன்னல்கள் சேதம் அடைந்தும் கட்டுமானத்தில் லேசான கீறல்களும் காணப்படுகிறது.
இதேபோல் ஆதிதிராவிட நலத்துறை மாணவர் ,மாணவியர் விடுதியின் காம்பவுண்ட் சுவர் சேதமடைந்து உள்ளது. இங்கு செல்லும் தார் ரோடு ஜல்லிகற்கள் பெயர்ந்து வருகிறது.
ஊராட்சியின் நுண் உரக்குடில் சேதமடைந்துள்ளது. ஊராட்சி அலுவலகம் கட்டடத்தில் ஆங்காங்கே செங்கற்கள் தெரியும் வகையில் சேதமடைந்து வருகிறது..
பல ஆண்டுகளாக இ சேவை மைய கட்டிடம் செயல்படாமல் உள்ளது.
* சேதமடைந்த கட்டடங்கள்
இக் கிராமத்தில் சேதம் அடைந்து காணப்படும் அரசு துறைக்கு சொந்தமான கட்டிடங்களை சீரமைக்க வேண்டும். நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும். இ சேவை மையம், சுகாதார வளாகம், சமுதாயக்கூடம் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும். பயணியர் நிழல் குடை கட்டப்பட வேண்டும்.
- தர்மராஜ், சமூக ஆர்வலர்.
* மேம்படுத்த வேண்டும்
இங்குள்ள ஆதிதிராவிடர் நலத்துறையில் இயங்கும் மாணவர் மற்றும் மாணவியர்களின் விடுதிகளில் உள்ள குறைகளை சரி செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். போதிய குடிநீர் வசதி செய்து தர வேண்டும். விடுதிக்கு செல்லும் தார் ரோட்டினை பேவர் பிளாக் ரோடாக அமைத்து தர வேண்டும்.
-குமார், குடியிருப்பாளர்.
* சீரமைப்பு அவசியம்
தற்போது உள்ள மயானத்திற்கு செல்லும் தார் ரோடு போட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சேதமடைந்து வருகிறது. இதனை புதிதாக போட்டு சீரமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கருப்பையா, குடியிருப்பாளர்.
* தெரு ரோடு சீரமைப்பு
கிராமத்தின் தெற்கு தெருவில் பல வீடுகள் உள்ள நிலையில் இங்கு உள்ள ரோடு சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் நடந்து செல்வோர் சிரமப்படும் நிலை உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும்.
-சேது, குடியிருப்பாளர்.