தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/உங்கள் ஊராட்சி

உங்கள் ஊராட்சி

உங்கள் ஊராட்சி


UPDATED : நவ 02, 2026 07:59 PM

ADDED : நவ 02, 2026 07:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 07:59 PM ADDED : நவ 02, 2026 07:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேதமடைந்த சுகாதார வளாகம், சுய உதவி குழு கட்டடம்,

*'இன்னலில் ஸ்ரீவில்லிபுத்தூர் இடையன்குளம் ஊராட்சி மக்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்: சேதமடைந்த சுகாதார வளாகம், மகளிர் சுய உதவி குழு கட்டடம், சமுதாயக்கூடம் இல்லாமல் சிரமம், புறக்கணிக்கும் பஸ்களால் போக்குவரத்து அவதி போன்ற குறைகளால் ஸ்ரீவில்லிபுத்துார் ஒன்றியம் இடையன்குளம் ஊராட்சி கிராம மக்கள் தினமும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து மம்சாபுரம் வழியாக ராஜபாளையம் செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த ஊராட்சியில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த ஊரின் வழியாக மதுரை, அருப்புக்கோட்டை, கோவில்பட்டி, விருதுநகர் போன்ற நகரங்களுக்கு முன்பு இயங்கிய தனியார் பஸ்கள் கடந்த பல ஆண்டுகளாக இடையன்குளம் வராமல் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கிறது.

இதேபோல் ஸ்ரீவில்லிபுத்துார்- ராஜபாளையம் வழித்தடத்தில் இயங்கிய டவுன் பஸ்கள் தற்போது சரிவர வருவதில்லை. பல பஸ்கள் மம்சாபுரத்துடன் திரும்பி செல்வதால் இப்பகுதி மக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் தினசரி தூய்மை பணி மேற்கொள்ளாமல் கழிவுகள் தேங்கி சுகாதாரக்கேடு காணப்படுகிறது. பெண்கள் சுகாதார வளாகம் பாழடைந்து காணப்படுவதால் அதனை பயன்படுத்துவதில் பெண்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். ஊராட்சி அலுவலகத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழு கட்டடமும் சேதமடைந்துள்ளது.

சுப நிகழ்ச்சிகள் நடத்த சமுதாயக்கூடம் இல்லாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மயானத்தில் சுகாதாரக் கேடும், கட்டடங்களை பயன்படுத்த சிரமப்படும் நிலையும் உள்ளது.

இடையன்குளம் பஸ் ஸ்டாப் நிழற்குடை அருகிலும், ரோட்டோரமும் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு காணப்படுகிறது.

தேவை சமுதாயக்கூடம்



கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் சுப நிகழ்ச்சிகள் நடத்த சமுதாயக்கூடம் இல்லாமல் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, அனைத்து வசதிகளுடன் கூடிய சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும். கூடுதலாக மேல்நிலைத் தண்ணீர் தொட்டி அமைத்து போதிய அளவிற்கு தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும்.

-அதிசயம், குடியிருப்பாளர்.

* புறக்கணிக்கும் பஸ்கள்

இடையன்குளம், மம்சாபுரம் வழியாக மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, கோவில்பட்டி போன்ற நகரங்களுக்கு பல தனியார் பஸ்கள் முன்பு இயங்கி வந்தது. தற்போது எந்த தனியார் பஸ்சும் வருவது இல்லை. அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வரும் அரசு பஸ்களும் மம்சாபுரத்துடன் திரும்பி விடுவதால் மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே, அனைத்து பஸ்களும் வந்து செல்ல அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகர், குடியிருப்பாளர்.

* திறந்த வெளியால் சுகாதாரக்கேடு

ஊராட்சியில் ஆண், பெண்களுக்கு தேவையான அளவிற்கு போதுமான அளவில் சுகாதார வளாகங்கள் இல்லாததால் திறந்த வெளியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மழை மற்றும் இரவு நேரங்களில் மேலும் சிரமப்பட வேண்டியது உள்ளது.

எனவே, கூடுதல் சுகாதார வளாகங்கள்

கட்ட வேண்டும். மயானத்தை சீரமைக்க வேண்டும்.

-சமுத்திரம், குடியிருப்பாளர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us