/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேவதானம் கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் வாலிபர் சுட்டுப்பிடிப்பு- போலீசாரிடம் நியாயம் கேட்டவரே 'சம்பவம்' செய்ததால் அதிர்ச்சி

ADDED : நவ 13, 2025 02:09 AM

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் கோயில் காவலாளிகள் பேச்சிமுத்து 50, சங்கர பாண்டியன் 65, கொலை வழக்கில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற நாகராஜ் 25, என்பவரை போலீசார் காலில் சுட்டுப்பிடித்தனர்.
இவர், கொலை தொடர்பாக மக்கள் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலாளிகள் பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகியோர் இரவு பணியின் போது வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
இதில் கொலையாளிகள் உண்டியல் பணத்தை திருடியது மட்டுமின்றி, கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் எடுத்துச் சென்றனர்.
சம்பவ இடத்தில் மதுரை டி.ஐ.ஜி அபிநவ் குமார், எஸ்.பி., கண்ணன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி.,க்கள் ராஜா, பஸினா பீவி தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு வடக்கு தேவதானத்தை சேர்ந்த கணேசன் மகன் நாகராஜ் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்க அவரை சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்ற போது மறைத்து வைத்திருந்த அரிவாளால் எஸ்.ஐ., கோட்டியப்பசாமியை வெட்டிவிட்டு தப்ப முயன்றார்.
உடன் இருந்த சேத்துார் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வாலிபரை காலில் சுட்டு பிடித்தார். காயமடைந்த நாகராஜ், எஸ்.ஐ., கோட்டியப்பசாமி இருவரையும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.