ADDED : ஆக 27, 2026 06:33 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை, ஆக.28 -
அருப்புக்கோட்டை நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் தனியார் வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டி வடக்கு துரைராஜபுரத்தைச் சேர்ந்த பழைய பாட்டில் சேகரிக்கும் சந்திரசேகர், 49, கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். டவுன் போலீசார் நேற்று முன்தினம் மாலை பாலையம்பட்டி ரோட்டில் சந்தேகப்படும்படியாக நடந்து சென்ற அருப்புக்கோட்டை அருகே போடம்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமியை 21, பிடித்து விசாரித்தனர். இதில் சம்பவத்தன்று இருவரும் குடித்து விட்டு போதையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் சந்திரசேகர் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரிய வந்தது. போலீசார் கருப்பசாமியை கைது செய்து மேலும் விசாரிக்கின்றனர்.
