ADDED : ஆக 07, 2026 06:33 AM
அ நிறம் | அளவு
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேலபெத்தலுப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மனைவி காளியம்மாள்.
இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் முத்துலட்சுமிக்கும் குழாய் தண்ணீர் வீட்டுப் பகுதிக்கு வந்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த முருகேசனின் தம்பி செந்தில் முருகனுக்கும் 31, முத்துலட்சுமியின் மகன் மேட்டமலை அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் வீட்டிற்குள் சென்ற மாணவர் கத்தியை எடுத்து வந்து செந்தில்முருகனை குத்தியதில் அவர் இறந்தார். கிழக்கு போலீசார் விசாரித்து மாணவரை கைது செய்தனர்.
