/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குறி சொல்வதாக ரூ.22 ஆயிரம் மோசடி செய்த வாலிபர்கள் கைது
/
குறி சொல்வதாக ரூ.22 ஆயிரம் மோசடி செய்த வாலிபர்கள் கைது
குறி சொல்வதாக ரூ.22 ஆயிரம் மோசடி செய்த வாலிபர்கள் கைது
குறி சொல்வதாக ரூ.22 ஆயிரம் மோசடி செய்த வாலிபர்கள் கைது
ADDED : நவ 13, 2025 12:14 AM

காரியாபட்டி: காரியாபட்டி சின்னப் புளியம்பட்டியில் குறி செல்வதாக கூறி ரூ.22 ஆயிரத்தை அபேஸ் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
காரியாபட்டி சின்னப்புளியம்பட்டியில் நேற்று மாலை இருவர் பிரபு என்பவர் வீட்டிற்கு சென்று, உனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது. செய்வினை, பில்லி, சூனியத்தை எடுத்தால் உடல்நிலை சரியாகிவிடும்.
அதற்கு ரூ. 5 ஆயிரம் செலவாகும் என்றனர். இதை நம்பிய அவர் ரூ.5 ஆயிரம் கொடுத்தார்.
ஒரு பித்தளை செம்பில் தண்ணீர் நிரப்பி, விபூதி போட்டதும் தகடு வந்தது.
இதையடுத்து வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்து வைத்தால் அனைத்து தீய சக்திகளும் விலகி, பணம் சேரும் என தெரிவித்ததும் ரூ.17 ஆயிரத்தை எடுத்து வைத்தார்.
இந்நிலையில் செம்பில் இருந்த தண்ணீரில் மஞ்சளை கலந்து வீடு முழுக்க தெளித்து வர பிரபுவை அனுப்பினர்.
திரும்பி வருவதற்குள் பணத்துடன் இருவரும் தப்பி ஓடினர்.
மல்லாங்கிணர் போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்ததில் தூத்துக்குடி சூழவாய்க்காலை சேர்ந்த பார்த்திபன் 25, ரமேஷ் 24 என தெரிந்தது.
பணத்தை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து, விசாரிக்கின்றனர்.

