/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
/
போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : நவ 13, 2025 12:13 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிவகாசியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த கரூரை சேர்ந்த செல்வம் என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கரூர் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம் 27. இவர் அங்குள்ள தமிழ்நாடு காகித ஆலையில் வேலை செய்து வந்தார். 2023ல் இன்ஸ்டாகிராம் மூலம் சிவகாசியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பழகி கரூருக்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிவகாசி மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் செல்வத்திற்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.

