sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நில மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் வடிவேலு, மனைவி மீது புறநகர் கமிஷனரிடம் புகார்

/

நில மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் வடிவேலு, மனைவி மீது புறநகர் கமிஷனரிடம் புகார்

நில மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் வடிவேலு, மனைவி மீது புறநகர் கமிஷனரிடம் புகார்

நில மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் வடிவேலு, மனைவி மீது புறநகர் கமிஷனரிடம் புகார்


UPDATED : ஆக 02, 2011 01:23 AM

ADDED : ஆக 01, 2011 11:12 PM

Google News

UPDATED : ஆக 02, 2011 01:23 AM ADDED : ஆக 01, 2011 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிமலை: பல கோடி ரூபாய் மதிப்புப் பெறும், ஆறு கிரவுண்டு இடத்திற்கு, போலி ஆவணம் தயாரித்து, மோசடியில் ஈடுபட்டுள்ள நடிகர் வடிவேலு, அவரின் மனைவி உள்ளிட்ட, நான்குபேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, புறநகர் கமிஷனர் ராஜேஷ் தாசிடம் ஓய்வு பெற்ற ஐ.ஓ.பி., உதவி பொதுமேலாளர் பழனியப்பன் புகார் அளித்தார்.



ஓம்சக்தி கார்மென்ட்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ராமச்சந்திரன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில், கடந்த 1993ம் ஆண்டு ஐந்து லட்ச ரூபாய் கடன் பெற்றார்.

கடனை திருப்பிச் செலுத்தாததால், அந்நிறுவனத்திற்குச் சொந்தமான இரும்புலியூர், முடிச்சூர் சாலையில் உள்ள ஆறு கிரவுண்டு நிலத்தை, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் பொது ஏலத்தில் விட்டு, கடன் தொகையை வசூலிக்கத் திட்டமிட்டது. அதன்படி, கடந்த 2004ம் ஆண்டு பத்திரிகையில் ஆறு கிரவுண்டு நிலத்தை பொது ஏலம் விட, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் விளம்பரம் செய்தது. இந்த விளம்பரத்தைப் பார்த்த, ஓய்வு பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உதவி பொது மேலாளர் பழனியப்பன், பொது ஏலத்தில் கலந்து கொண்டு, 20 லட்சம் ரூபாய்க்கு ஆறு கிரவுண்டு காலி இடத்தை ஏலத்தில் எடுத்தார். அந்த இடத்தை காலியாகவே வைத்திருந்தார்.



இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு, அந்த இடத்தில் ஒரு சிலர் சுற்றுச்சுவர் கட்டி வருவதாக கேள்விப்பட்டு, பழனியப்பன் அங்கு சென்றார். சுற்றுச்சுவர் கட்டும் இடத்தில் இருந்த நபரிடம், தனக்குச் சொந்தமான இடத்தில் சுற்றுச் சுவர் கட்டக்கூடாது என, பழனியப்பன் தகராறு செய்தார். அங்கிருந்த நடிகர் வடிவேலுவின் மேலாளர் ஒருவர், 'இந்த இடம் நடிகர் வடிவேலுக்கு சொந்தமானது; யாரிடம் வேண்டுமானாலும் புகார் சொல்லுங்கள்' என்று கூறியதால், பழனியப்பன் அதிர்ச்சியடைந்தார். பத்திரப் பதிவு அலுவலகத்தில், வில்லங்கச் சான்றுக்கு பழனியப்பன் விண்ணப்பித்தார். அதில், ஓம்சக்தி கார்மென்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமச்சந்திரனின் மனைவி, மகன் பிரபு ஆகியோர், போலி ஆவணம் தயாரித்து, நடிகர் வடிவேலுக்கு பொது அதிகாரம் கொடுத்தது தெரியவந்தது.



மேலும், நடிகர் வடிவேலு பொதுஅதிகாரத்தைப் பெற்று, அவரது மனைவி விசாலாட்சிக்கு, 'கிப்டாக' ஆறு கிரவுண்டு இடத்தை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்புப் பெறும் இரும்புலியூர், முடிச்சூர் ரோட்டில் உள்ள ஆறு கிரவுண்டு இடத்திற்கு போலி ஆவணம் தயாரித்து, மோசடியில் ஈடுபட்ட நடிகர் வடிவேலு, அவரது மனைவி விசாலாட்சி, ராமச்சந்திரனின் மனைவி மற்றும் மகன் பிரபு ஆகியோர் மீது, நடவடிக்கை எடுக்கும்படி புறநகர் கமிஷனர் ராஜேஷ் தாசிடம், ஓய்வு பெற்ற ஐ.ஓ.பி., உதவி பொதுமேலாளர் பழனியப்பன் புகார் அளித்தார். புகாரை புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் உத்தரவிட்டார்.








      Dinamalar
      Follow us