sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டீசல் தட்டுப்பாடு...:பண்டிகை கால சிறப்பு பஸ்கள் இயக்குவது முடக்க

/

சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டீசல் தட்டுப்பாடு...:பண்டிகை கால சிறப்பு பஸ்கள் இயக்குவது முடக்க

சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டீசல் தட்டுப்பாடு...:பண்டிகை கால சிறப்பு பஸ்கள் இயக்குவது முடக்க

சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டீசல் தட்டுப்பாடு...:பண்டிகை கால சிறப்பு பஸ்கள் இயக்குவது முடக்க


ADDED : அக் 02, 2011 12:36 AM

Google News

ADDED : அக் 02, 2011 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம், ஆயில் நிறுவனங்களிடம் இருந்து பெரும், டீசலுக்கு உண்டான பணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், டீசல் சப்ளை செய்யப்படவில்லை.

இதனால், பஸ்களை இயக்க முடியாத நிலை, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 1,905 பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலம் தலைமை டெப்போ உட்பட, 14 பணிமனைகளில் பஸ்கள் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.



இந்த நான்கு மாவட்டங்களில் நகர, கிராமப்புறங்களில் தினம்தோறும் சாரசரியாக, 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். மாதத்துக்கு, 2.97 கோடி கிலோ மீட்டர் இந்த பஸ்கள் இயக்கப்பட்டாலும், இவற்றின் செயல்பாடு என்பது மக்களை திருப்திபடுத்துவதாக இல்லை. அத்துடன் மாதத்துக்கு, 41.96 கோடி ரூபாய் வருவாயை ஈட்டுகிறது.வருவாய்க்கு மேல் செலவினமும் அதிகரித்து வருவதால், போக்குவரத்துக் கழகத்தின் நஷ்டம் என்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. டயர், உதிரிபாகங்கள், தொழிலாளர்களின் சம்பளம் என்ற வகையில் செலவின வகைகளை எடுத்துக் கொண்டால், மாதத்துக்கு, 60 கோடி ரூபாயை தாண்டுகிறது.



இதனால், அரசு போக்குவரத்துக் கழகம் கடுமையான நிதி பற்றாக்குறையில் தள்ளாட்டம் போடுகிறது. தற்போது, பஸ்களை இயக்க போதுமான அளவு டீசல் இருப்பு வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆயில் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை முறையாக செலுத்தத் தவறியதால், நிறுவனங்கள், டீசல் சப்ளையை குறைத்து விட்டன. இதனால், சில நாட்களாக பல கிளை டெப்போக்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பஸ்கள் டீசல் பிடிப்பதற்காக ஒரு டெப்போவில் இருந்து மற்றொரு டிப்போவுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இரவு நேர பஸ்கள், கலெக்ஷன் இல்லாத பகுதிகளில் இயக்கப்படும் பஸ்களின் வழித்தடங்கள் குறைப்பும் செய்யப்பட்டுள்ளது.



மேலும், ஒரே வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களில் சப்தம் இன்றி எண்ணிக்கை குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பண்டிகை சீசன் காலங்களில், சேலம் கோட்டத்தில் இருந்து, 160 சிறப்பு பஸ்கள் வரை இயக்கப்படுவது வழக்கம்.

கடுமையான டீசல் தட்டுப்பாடு காரணமாக, சிறப்பு பஸ்களின் இயக்கம் முற்றிலும் தடைபட்டுள்ளது.தற்போது, சேலம் கோட்டத்தில் ஒன்றரை நாளுக்கு தேவையான டீசல் மட்டுமே இருப்பு உள்ளது. ஆயில் நிறுவனங்களுக்கு பணம் சென்று சேராததால் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது.இந்நிலை தொடரும் பட்சத்தில், சேலம் கோட்ட அரசு பஸ்கள் இயங்கும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பஸ்களின் இயக்கம் முற்றிலும் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நமது நிருபர் குழு-








      Dinamalar
      Follow us