UPDATED : ஜன 10, 2017 07:37 AM
ADDED : ஜன 08, 2017 10:33 PM

''எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில், என் முடிவை அறிவிப்பேன்,'' என, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்தார்.
@Image@அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டதற்கு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் எல்லாம், 'கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும்' என, ஜெ., அண்ணன் மகள் தீபாவை வலியுறுத்தி வருகின்றனர். தி.நகரில் உள்ள அவரது வீட்டின் முன், தினமும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
நேற்று மாலை, தொண்டர்களிடம் தீபா பேசுகை யில், ''வரும், 17ல், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை, அனைவரும் கொண்டாட வேண்டும். அன்று, அவரது சிலைக்கு மாலை அணிவிக்க
உள்ளேன். அப்போது, என் முடிவை அறிவிப் பேன்; அதுவரை அனைவரும் காத்திருப்போம்,'' என்றார்.@nextcolumn@
தீபாவை சந்தித்த, திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை முன்னாள் எம்.எல்.ஏ., மணிவாசகன் கூறுகையில், ''முன்னாள் எம்.பி.,- எம்.எல்.ஏ.,க் களை, அ.தி.மு.க., அலுவலகத்திற்கு அழைத்துள்ளனர். எனக்கு சசிகலா தலைமை பிடிக்கவில்லை. எனவே, தீபாவை பார்க்க வந்துள் ளேன். எங்கள் மாவட்ட தொண்டர்களும், சசிகலாவை ஏற்றுக் கொள்ளவில்லை,'' என்றார்.
நாஞ்சில் சம்பத்தை கண்டித்து மறியல்
சசிகலாவை சந்தித்த பின், பேட்டி அளித்த, அ.தி. மு.க., பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தீபா குறித்த கேள்விக்கு, 'சில நேரங்களில், துரும்பு கூட துாணாக தெரியும்' என, பதில் அளித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீபா ஆதரவாளர்கள், நேற்று காலை, தி.நகர் வெங்கட் நாராயணன்சாலையில், மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தீபாவுக்கு ஆதரவு திரட்ட 'வாட்ஸ் ஆப்' குழுக்கள்
தீபாவுக்கு ஆதரவு திரட்ட, அனைத்து மாவட்டங்களிலும், அ.தி.மு.க.,வினர் தனி, 'வாட்ஸ்
ஆப்' குழுக்களை துவக்கி உள்ளனர்.@nextcolumn@
அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டற்கு, கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அந்த எதிர்ப்பாளர்கள் எல்லாம், 'கட்சிக்கு தலைமையேற்க வாருங்கள்' என, ஜெ., அண்ணன் மகள் தீபாவுக்கு, அழைப்பு விடுத்து வருகின்றனர். அவரும் அரசியலுக்கு வருவதாக உறுதி அளித்துள்ளார்.
இதையடுத்து, அவருக்கு ஆதரவு திரட்ட, அனைத்து மாவட்டங்களிலும், 'ஜெ., தீபா ஆதரவு குழு' என்ற பெயரில், வாட்ஸ் ஆப் குழுக்களை, ஆதரவாளர்கள் துவக்கி உள்ளனர்.
- நமது நிருபர் -
