திருச்சி பாலக்கரை ஸ்டேஷனில்ரயில்கள் நிற்க கோரி வழக்கு:ஐகோர்ட் கிளை நோட்டீஸ்
திருச்சி பாலக்கரை ஸ்டேஷனில்ரயில்கள் நிற்க கோரி வழக்கு:ஐகோர்ட் கிளை நோட்டீஸ்
ADDED : ஆக 23, 2011 04:52 AM
மதுரை:திருச்சி பாலக்கரை ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை கோரிய மனு குறித்து பதிலளிக்க தெற்கு ரயில்வேக்கு மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்பியது.
திருச்சி புறநகர் மாவட்ட ஐக்கிய ஜனதா தள தலைவர் பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த பொது நல வழக்கு:திருச்சி ஜங்ஷனிலிருந்து கரூர், ஈரோடு, கோவை செல்லும் ரயில்கள் பாலக்கரை ஸ்டேஷனை கடந்து செல்கின்றன. ஏற்கனவே எல்லா ரயில்களும் இங்கு நின்று சென்றன. தற்போது ரயில்கள் இங்கு நிற்பதில்லை. மேலும் ஸ்டேஷனில் குடிநீர், கழிப்பறை, பயணிகள் ஓய்வறை, விளக்குகள் இல்லை. இதுகுறித்து ஜூன் 7ல் மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை. அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். ரயில்கள் நின்று செல்ல உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ் பெஞ்ச், இதுகுறித்து பதிலளிக்க திருச்சி கோட்ட மேலாளர், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.