sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மீதுநடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் மனு

/

காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மீதுநடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் மனு

காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மீதுநடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் மனு

காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மீதுநடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் மனு


ADDED : செப் 16, 2011 12:14 AM

Google News

ADDED : செப் 16, 2011 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:ராஜிவ் கொலையாளிகளுக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்க வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட, தமிழக சட்டசபைத் தீர்மானத்திற்கு எதிராகப் பேசிய காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மீது நடவடிக்கை கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டது.மதுரை ஐகோர்ட் கிளை வழக்கறிஞர் கே.நீலமேகம் தாக்கல் செய்த மனு:

ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு, தூக்குத் தண்டனையை எட்டு வாரங்களுக்கு நிறுத்தி, ஐகோர்ட் உத்தரவிட்டது.



மூவரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி, தமிழக சட்டசபையில், ஆக., 30ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, இண்டர்நெட்டில் டிவிட்டர்.காம் மற்றும் பேஸ் புக்கில், சட்டசபைத் தீர்மானத்தை விமர்சித்துள்ளார். ராஜிவ் கொலையாளிகள் தண்டனையைக் குறைக்க, தமிழக சட்டசபையில் வலியுறுத்தியது போல, காஷ்மீர் சட்டசபையில், அப்சல் குரு தண்டனையைக் குறைக்கத் தீர்மானம் நிறைவேற்றினால், அங்கு கட்சிகள் சும்மா இருக்குமா? என கேள்வி எழுப்பினார்.

அவர் மீது நடவடிக்கை கோரி, தென் மண்டல ஐ.ஜ.யிடம் புகார் கொடுத்தேன். வழக்குப் பதிய மத்திய, மாநில அரசுகளிடம் சட்டக் கருத்து கேட்கவும் வேண்டுகோள் விடுத்தேன். நடவடிக்கை இல்லை. மத்திய அரசு அட்டர்னி ஜெனரல், தமிழக அட்வகேட் ஜெனரலிடம் சட்டக் கருத்து பெற்று, காஷ்மீர் மாநில முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு இருந்தது.மனு நீதிபதி ஆர்.மாலா முன், விரைவில் விசாரணைக்கு வருகிறது.








      Dinamalar
      Follow us