உ.பி.,யில் இருந்து தப்பி வந்த காதலர்கள்நண்பர் அறையில் தூக்கிட்டு தற்கொலை
உ.பி.,யில் இருந்து தப்பி வந்த காதலர்கள்நண்பர் அறையில் தூக்கிட்டு தற்கொலை
ADDED : செப் 20, 2011 05:25 AM
கோவை:இருவேறு மதங்களைச் சேர்ந்த உ.பி.,மாநில காதலர்கள், பெற்றோரிடம் இருந்து தப்பித்து, வாழ வந்த இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.உத்தரப்பிரதேசம், கோரக்பூர் - குரோரியா பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஜூலால்.
இவரது மகள் ரேகா, 20. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அபுஜூல்லாவின் மகன் சர்வரே ஆலம், 24. என்பவரும் காதலர்கள்.வெவ்வேறு மதத்தை சேர்ந்த இவர்களின் காதலுக்கு, இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், அவர்கள் இரு நாட்களுக்கு முன் கோவைக்கு தப்பி வந்தனர்.
ரேஸ்கோர்ஸ் பகுதியில், வருமான வரித்துறை அலுவலகம் அருகே தங்கி, தனியார் நிறுவன வேலைக்குச் செல்லும் நண்பர் பல்தேவ் அறையில் தஞ்சம் அடைந்தனர்.தங்கள் இருவருக்கும் ஏதாவது வேலை வாங்கித் தரும்படி நண்பரிடம் கேட்டுக் கொண்டனர். இச்சூழலில், நேற்றுமுன்தினம் காலை வேலைக்குச் செல்லும் முன், சில நாட்களில் வேலை தேடித் தருவதாகக் கூறிச் சென்றார் பல்தேவ்.நேற்று முன்தினம் இரவு 10.00 மணிக்கு வேலையிலிருந்து திரும்பி வந்தபோது, அறைக்குள் காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.ரேஸ்கோர்ஸ் போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து, சடலங்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

