சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு கமிஷனரிடம் மனு
சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு கமிஷனரிடம் மனு
ADDED : அக் 06, 2011 09:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு, போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சினிமா நடிகர் சங்கத்தை போலவே, சின்னத்திரை நடிகர் சங்கமும், அக்டோபர் 9ம் தேதி, தேர்தல் மூலம் சங்கத்தலைவர், செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க உள்ளது. இதற்காக, சிவன் ஸ்ரீநிவாஸ், ராஜேந்திரன் மற்றும் பானுபிரகாஷ் ஆகியோர் தலைமையில், மூன்று அணிகள், தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.
வரும் ஞாயிற்றுக்கிழமை, கோயம்பேடு அருகே விருகம்பாக்கம் மார்க்கெட் சாலையில் உள்ள ஏ.கே.ஆர்., மகாலில், தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலையொட்டி, அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில், சென்னை பெருநகர போலீஸ் கமிஷனரிடம் பாதுகாப்பு கேட்டு சிவன் ஸ்ரீநிவாஸ் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

