ஓய்வு பெற்றார் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்கண்டேய கட்ஜு
ஓய்வு பெற்றார் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்கண்டேய கட்ஜு
ADDED : செப் 19, 2011 10:37 PM
புதுடில்லி : பரபரப்பான பல தீர்ப்புகளை வழங்கிய சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, ஓய்வு பெற்றார்.சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக ஐந்தரை ஆண்டு காலம் பணியாற்றிய மார்கண்டேய கட்ஜு தன் பணி காலத்தில் முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.கவுரவ கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றும், போலி எண்கவுன்டர் போலீசாருக்கும் மரண தண்டனை அளிக்க வேண்டும் என, குறிப்பிட்டிருந்தார்.முஸ்லிம்கள் தங்கள் கல்வி கூடங்களில் தாடி வைத்துகொள்ளவேண்டும் என வற்புறுத்தக்கூடாது, இதன் மூலம் நம்நாட்டை தலிபான் இந்தியாவாக மாற்ற முயற்சிக்கக்கூடாது என, கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு எழுந்ததால், இந்த தீர்ப்பை வாபஸ் பெற்றார். ஊழலுக்கு எதிராக கடுமையான தீர்ப்புகளையும் இவர் வழங்கியுள்ளார்.மார்கண்டேய கட்ஜுக்கு நடந்த பிரிவு உபசார விழாவில் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு புகழாரம் சூட்டினர்.