ADDED : டிச 16, 2024 07:20 PM

திருமணத்தடையா...
சென்னைக்கு அருகில் உள்ள மீஞ்சூர் வரதராஜப் பெருமாளை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தவத்தில் ஈடுபட்ட பரத்வாஜ முனிவருக்கு இங்கு பெருமாள் அருள்புரிந்தார். இதன் அடிப்படையில் ராஜராஜசோழன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டு சுவாமிக்கு வரதராஜ பெருமாள் எனப் பெயர் சூட்டப்பட்டது.
மூலவர் வரதராஜ பெருமாள் கிழக்கு நோக்கியபடி ஏழடி உயரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்றபடி காட்சி தருகிறார். பெருந்தேவி தாயார், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நரசிம்மர், அனுமன் சன்னதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் அஷ்டலட்சுமி, தசாவதாரச் சிற்பங்கள் உள்ளன. வைகாசியில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டத்தன்று மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோயிலிலும் தேரோட்டம் நடக்கும்.
வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமை முக்கிய நாட்கள்.
சென்னையில் இருந்து 27 கி.மீ.,
திருவள்ளூரில் இருந்து 52 கி.மீ.
நேரம்: காலை 7:00 -- 11:00 மணி
மாலை 5:00 - - 8:00 மணி
தொடர்புக்கு: 99529 30743
அருகிலுள்ள தலம்: தேவதானம் ரங்கநாதர் 8 கி.மீ.,
நேரம்: காலை 7:00 - 11:00 மணி
மாலை 4:30 - 7:00 மணி
தொடர்புக்கு: 97868 66895, 90874 75282