அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை கைப்பற்ற போட்டி துவங்கியது: எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களிடம் ஆதரவு திரட்டும் சசி சொந்தங்கள்: மேற்கு மண்டல தலைவர்களும் முனைப்பு காட்டுவதால் பரபரப்பு
அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை கைப்பற்ற போட்டி துவங்கியது: எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களிடம் ஆதரவு திரட்டும் சசி சொந்தங்கள்: மேற்கு மண்டல தலைவர்களும் முனைப்பு காட்டுவதால் பரபரப்பு
UPDATED : டிச 08, 2016 09:52 AM
ADDED : டிச 07, 2016 10:58 PM

மறைந்த ஜெயலலிதா வகித்து வந்த, பொதுச் செயலர் பதவி யாருக்கு என்ற கேள்வி, ஆளும், அ.தி.மு.க.,வில் எழுந்துள்ளது.
@Image@இப்பதவியை கைப்பற்றுபவரே, கட்சியிலும், ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதால், சசிகலா குடும்பத்தில் கடும் போட்டி துவங்கி உள்ளது.
முதல்வர் பதவியை, தென் மாவட்டத்தை சேர்ந்தவருக்கு கொடுத்துள்ளதால், கட்சி பதவியை, மேற்கு மண்டலத்தினருக்கு வழங்க வேண்டும் என, கொங்கு பகுதி தலைவர்கள் முனைப்பு காட்டுவதால், அ.தி.மு.க.,வில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அ.தி.மு.க.,வில், பொதுச் செயலர் பதவிக்கே, அனைத்து அதிகாரங்களும் தரப்பட்டு உள்ளன. நிர்வாகிகள் நியமனம், நீக்கம், எம்.பி., - எம்.எல்.ஏ., வேட்பாளர்கள் தேர்வு என, எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்பவர் என்பதால், இப்பதவியில் இருந்த ஜெயலலிதா வின் கட்டுப்பாட்டுக்குள் கட்சி அடங்கி கிடந்தது.
ஆட்டிப்படைக்கலாம்
இப்போது, அவரது மறைவுக்கு பின், அவர் வகித்து வந்த முதல்வர் பதவி, மூத்த அமைச்ச ரான, ஓ.பன்னீர்செல்வத்திற்கு தரப்பட்டுள்ளது. அதில் சிக்கல் இருந்தாலும், வெளியில் தெரியா மல், விரைவாக முடிவு எடுக்கப்பட்டது; அதே போல, பொதுச் செயலர் விஷயத்தில், முடிவு எடுக்க முடியாது என தெரிகிறது.
காரணம், இப்பதவியை பிடிப்பவரின் கட்டுப் பாட்டில் தான் ஒட்டுமொத்த கட்சியும் கட்டுப் பட்டு இருக்க வேண்டும். அதன் மூலம், ஆட்சி நிர்வாகத்தையும் ஆட்டி படைக்க முடியும். மேலும், இப்பதவிக்கு வரக்கூடியவருக்கு, அடுத்து வரவிருக்கும், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட கூடிய வாய்ப்பும் கிடைக்கலாம்.
எனவே, இந்த பதவி யாருக்கு என்பது தான், இப்போது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி. அதன் தொடர்ச்சியாக, இந்த உயர் பொறுப்பு, சசிகலா குடும்பத்தினருக்கு கிடைக்குமா அல்லது அ.தி.மு.க.,வில் யாருக்காவது
@nextcolumn@ கிடைக் குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
சசிகலா குடும்பம் என்கிற போது, அதில், சசி கலாவே முன்னிலையில் இருக்கிறார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜெயலலிதாவின் நிழலாக இருந்து, அரசியலை உற்று
கவனித்து வந்தவருக்கு, அந்த ஆசை இல்லாமல் இருக் காது என்றே நம்பப்படுகிறது.
அது, ஜெயலலிதா வுக்கு இறுதி சடங்குகள் செய்த போதும், பத்திரிகையாளர், சோ
ராமசாமி மறைவுக்கு, தனியாக சென்று அஞ்சலி செலுத்திய போதும், பளிச்சென
வெளிப்பட்டு உள்ளது.
அவரது குடும்பத்தினரில், கணவர் நடராஜன், சகிகலா அக்கா மகன் தினகரன், தம்பி திவாகரன் ஆகியோரும்,இப்பதவிக்கு வர விரும்புகின் றனர். அவர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களிடம் ஆதரவு திரட்டும் வேலையில், தீவிரமாக இறங்கி உள்ளனர். தற்போது, ஒரு வாரம், துக்க காலமாக அறிவித்துள்ளனர்; அதன்பின், இது தொடர்பான நடவடிக்கைகள் வெளிப்படையாக துவங்கும் என தெரிகிறது.
தினகரன்
இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: புதிய பொதுச் செயலரை, செயற் குழு கூடி தேர்வு செய்யும். பின், பொதுக்குழு கூடி, அங்கீகாரம் அளிக்கும். தற்போது, நடராஜன், கட்சியை வழிநடத்தி செல்லும் பொறுப்பு, தனக்கு உள்ளதாக, நேற்று, வட மாநில, 'டிவி' சேனல்களுக்கு பேட்டி அளித்துள் ளார்; அதன் மூலம், பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட, அவர் விரும்புவது தெரிய வந்துள்ளது.
ஆனால், சசிகலாவோ அல்லது தினகரனோ தான், அந்த பதவிக்கு வர வேண்டும் என, அவரது குடும்பத்திலும், கட்சியில் ஒரு தரப்பி லும் கூறுகின்றனர். ஏற்கனவே, ஜெயலலிதா பேரவை செயலர், பொருளாளர் பதவிகளை வகித்தவர் தினகரன். லோக்சபா - எம்.பி.,யாக வும், ராஜ்யசபா - எம்.பி.,யாகவும் இருந்துள்ளார்.
இதற்கிடையில், கட்சி எம்.எல்.ஏ.,க்களில் மேற்கு மண்டலத்தை சேர்ந்த, கவுண்டர் இனத்த வரே அதிகம் உள்ளனர். எனவே, அவர்களில் ஒருவருக்கு, பொதுச் செயலர் பதவி தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
1989 முதல் 2016 வரை...
அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, ஐந்து ஆண்டு களுக்கு ஒரு முறை, பொதுச் செயலர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும். 1988ல்,எம்.ஜி.ஆர்., @nextcolumn@ மறைவுக்கு பின், ஜானகி அணி, ஜெயலலிதா அணி என, அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது.
அப்போது, ஜெ., அணி சார்பில், பொதுச் செயலராக, ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். அடுத்து, 1989ல், இரண்டு அணிகளும் இணைந்தன. மீண்டும், அ.தி.மு.க., பொதுச் செயலராக, ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார்.அதன்பின், 1993, 1998, 2003, 2008, 2014ல் நடத்தப்பட்ட தேர்தலில், பொதுச் செயலராக, ஜெயலலிதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மறையும் வரை, அவரே அந்த பதவியில் நீடித்தார்.
ஜெ., விசுவாசிகள் எதிர்ப்பு!
ஜெயலலிதா தனக்கு பின், யார் கட்சியை வழிநடத்துவார் என்பதை அறிவிக்காததால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த சசிகலா, பொதுச் செயலராக முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆனால், அவரை தேர்வு செய்வதற்கு, ஜெயலலிதாவின்
விசுவாசிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், பொதுச் செயலர் பதவியை பிடிக்க, லோக்சபா துணை சபாநாயகர், தம்பி துரை முயற்சிப்பதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு, பா.ஜ., ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வராக, முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த, பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ள தால், பொதுச் செயலர் பதவியை, கவுண்டர் சமூகத்தை சேர்ந்த, தம்பிதுரைக்கு வழங்க வேண்டும் என, கொங்கு மண்டல, எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்துவதாக தெரிகிறது.
சசி குடும்பத்தில் பூசல்!
சசிகலா குடும்ப உறுப்பினர்களில், நடராஜன், திவாகரன், தினகரன் உட்பட சிலர், பொதுச் செயலராக விரும்புவதால், குடும்பத்தில் பூசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சி நிர்வாகி களில் பெரும்பாலானோர், யார் பக்கம் சாய்வது எனதெரியாமல், தவித்து வருகின்றனர். எனவே, பொதுச் செயலர், போட்டியின்றி தேர்வு செய்யப் படுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனினும், அனைவரையும் சமாதானப்படுத்தி, பொதுச் செயலரை போட்டியின்றி தேர்வு செய் வதற்கான முயற்சியில், சிலர் ஈடுபட்டுள்ளனர். பொதுச் செயலரை தேர்வு செய்ய, செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்துவது தொடர்பான அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளது.
- நமது நிருபர் -
