sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விதவை பெண்ணிடம் இடம் அபகரிப்பு:தி.மு.க., நிர்வாகி கைது

/

விதவை பெண்ணிடம் இடம் அபகரிப்பு:தி.மு.க., நிர்வாகி கைது

விதவை பெண்ணிடம் இடம் அபகரிப்பு:தி.மு.க., நிர்வாகி கைது

விதவை பெண்ணிடம் இடம் அபகரிப்பு:தி.மு.க., நிர்வாகி கைது


ADDED : ஜூலை 15, 2011 01:04 AM

Google News

ADDED : ஜூலை 15, 2011 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சியில், விதவை பெண்ணிடம் இடம் வாங்கி பணம் தராமல், கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க., பகுதி செயலரை, போலீசார் கைது செய்தனர்.திருச்சி திருவானைக்காவல், விக்னேஷ் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிப்பவர் ஹேமமாலினி, 37. இவருடைய கணவர் ஜெயசீலன், 2007ம் ஆண்டு, கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.திருச்சி, தி.மு.க., மலைக்கோட்டை பகுதி செயலர் மதிவாணனிடம் வாங்கிய கடனுக்கு, கரூர் பை-பாஸ் ரோட்டில் ராயல் சிட்டி கட்டடத்தில் இருந்த, தங்களது 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கடையை, 76 லட்சம் ரூபாய்க்கு கிரயம் செய்து கொடுக்க, ஹேமமாலினி ஒப்பந்தம் செய்தார்.

ஹேமமாலினிக்கு, 22 லட்ச ரூபாய் அட்வான்சாகக் கொடுத்த மதிவாணன், மீதத் தொகையான 54 லட்ச ரூபாயை, பிறகு கொடுப்பதாகக் கூறி ஏமாற்றி வந்தார்.அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயத்துக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மதிவாணனிடம் பணம் கேட்டதற்கு, மிரட்டல் விடுத்ததால், ஹேமமாலினி தன் மகளை அழைத்துக் கொண்டு, வெளியூர் சென்றுவிட்டார்.இந்நிலையில், ஹேமமாலினி நேற்று முன்தினம், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்துவிடம் இதுகுறித்து புகார் அளித்தார். விசாரணையில், ஏமாற்றியது உண்மை என்று தெரிய வந்ததை அடுத்து, நேற்று காலை, தி.மு.க., பகுதி செயலர் மதிவாணனை, போலீசார் கைது செய்தனர்.அவரை, 15 நாள் காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திருச்சி மத்திய சிறையில் மதிவாணன் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us