லோக்ஆயுக்தா கோர்டில் மாஜி முதல்வர் மனைவியுடன் ஆஜர்
லோக்ஆயுக்தா கோர்டில் மாஜி முதல்வர் மனைவியுடன் ஆஜர்
ADDED : செப் 09, 2011 12:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களுரூ: சுரங்க மோசடி தொடர்பான வழக்கில் இன்று முன்னாள் முதல்வர் குமாரசாமி , அவரது மனைவி அனிதா ஆகியோர் லோக்ஆயுக்தா கோர்டில் ஆஜராயினர்.
முறைகேடாக சுரங்க தொழில் நடத்த அனுமதியளித்ததாக லோக்ஆயுக்தா கோர்டில் முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி ஐகோர்டில் தாக்கல் செய்த மனு மீது நேற்று முன்ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால் லோக்ஆயுக்தா கோர்ட் 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத குமாரசாமி இன்று மனைவியுடன் ஆஜரனார். அவருடன் சுரங்க நிறுவனத்தின் உரிமையாளர் வினோத் கோயல் என்பவரும் ஆஜரானார்.