sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புதிய பாஸ்போர்ட் சேவை மையங்கள்:இன்று முதல் செயல்படும்

/

புதிய பாஸ்போர்ட் சேவை மையங்கள்:இன்று முதல் செயல்படும்

புதிய பாஸ்போர்ட் சேவை மையங்கள்:இன்று முதல் செயல்படும்

புதிய பாஸ்போர்ட் சேவை மையங்கள்:இன்று முதல் செயல்படும்


ADDED : செப் 15, 2011 11:46 PM

Google News

ADDED : செப் 15, 2011 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'சென்னையில் துவங்கப்பட்டுள்ள, மூன்று புதிய பாஸ்போர்ட் சேவை மையங்களில் பாஸ்போர்ட் பெற, இன்று முதல், 'ஆன்-லைனில்' விண்ணப்பிக்கலாம்' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில்பாண்டியன் கூறினார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட 10 வட மாவட்டங்களைச் சேர்ந்தோர், பாஸ்போர்ட் பெற, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வரவேண்டியிருந்தது. இந்த அலுவலகத்தில், சாதாரண மற்றும் 'தத்கல்' முறையில், நாள் ஒன்றுக்கு சராசரியாக 800 விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. ஊழியர்கள் பற்றாக்குறையால், விண்ணப்பதாரர்களுக்கு உரிய நேரத்தில் பாஸ்போர்ட் அளிக்க முடியாத நிலை நீடித்தது.



விண்ணப்பதாரர்களுக்கு துரிதமாக பாஸ்போர்ட் கிடைக்கும் வகையில், தனியார் பங்களிப்போடு தற்போது, சென்னையில் மூன்று புதிய பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன் கூறியதாவது: பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்போர், www.passportindia.gov.in

என்ற புதிய இணையதளத்தில், தான் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பதாரர்களின் விருப்பப்படி, மூன்று புதிய பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஏதாவது ஒன்றில், முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.ஏற்கனவே பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்தோருக்கு மட்டும், அடுத்த மாதம் வரை, நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை, சாஸ்திரி பவனில் உள்ள சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை, மேற்கண்ட இணையதளம் மூலமோ, 24 மணி நேரமும் செயல்படும், 1800 258 1800 என்ற 'டோல் ப்ரீ' எண்ணிலோ பெறலாம்.இவ்வாறு, செந்தில்பாண்டியன் கூறினார்.



புதிய பாஸ்போர்ட் சேவை மையங்களின் முகவரி:



1, பானுமதி ராமகிருஷ்ணா சாலை,

சாலிகிராமம், சென்னை - 93

நவீன்ஸ் பிரசீடியம்,

103, நெல்சன் மாணிக்கம் சாலை,

அமைந்தகரை, சென்னை - 29

கிளாரட் காம்ப்ளக்ஸ்,

17, துரைசாமி ரெட்டி தெரு,

தாம்பரம், சென்னை - 45








      Dinamalar
      Follow us