ஆந்திராவில் பந்த் அறிவிப்பு: ரயில் போக்குவரத்து ரத்து
ஆந்திராவில் பந்த் அறிவிப்பு: ரயில் போக்குவரத்து ரத்து
ADDED : செப் 23, 2011 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரைகோட்ட ரயில்வே பி.ஆர்.ஓ., வேணுகோபால் அறிவிப்பு: தெலுங்கானா போராட்ட கூட்டுக்குழு கமிட்டி இன்று முதல் செப்.,26 வரை பந்த் அறிவித்துள்ளது.
இதனால், மதுரை - ஹஸ்ரத் நிஜாமுதின் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ்(வ.எ.,12651), மதுரையில் இருந்து இன்று சென்னை எழும்பூர், குடூர், விஜயவாடா, விசாகபட்டிணம், ராஜ்பூர் வழியாகவும், ஹஸ்ரத் நிஜாமுதின் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் (12642), ஹஸ்ரத் நிஜாமுதினில் இருந்து இன்று போபால், வதோதரா, வாசிரோடு, பான்வெல், ரோகா, மதாகான், லோன்டா, யஸ்வந்த்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை எழும்பூர் வழியாக மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும். விவரங்களுக்கு (044) 2535 7398, 2533 0710, 2819 0216 ஆகிய போன்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவித்துள்ளார்.