தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அ.தி.மு.க., ஆதரவுக் கூட்டத்தை அழைத்து வர ரூ.200: எதிர்ப்பாளர்களைச் சமாளிக்க 'படியளப்பு' தீவிரம்

அ.தி.மு.க., ஆதரவுக் கூட்டத்தை அழைத்து வர ரூ.200: எதிர்ப்பாளர்களைச் சமாளிக்க 'படியளப்பு' தீவிரம்

அ.தி.மு.க., ஆதரவுக் கூட்டத்தை அழைத்து வர ரூ.200: எதிர்ப்பாளர்களைச் சமாளிக்க 'படியளப்பு' தீவிரம்


UPDATED : ஜன 07, 2017 01:48 PM

ADDED : ஜன 07, 2017 12:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2017 01:48 PM ADDED : ஜன 07, 2017 12:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க.,வில், ஆதரவுக் கூட்டத்தை அழைத்து வர, தலைக்கு, 200 ரூபாய் பட்டு வாடா செய்யப்படும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா தலைமைக்கு, தொண்டர்களிடமும், மக்களிடமும் எழுந்துள்ள எதிர்ப்புகளை சமாளிக்க, 'படியளப்பு' ஏற்பாடு களில், நிர்வாகிகள் தீவிரம் காட்ட துவங்கி உள்ளனர்.

@Image@அ.தி.மு.க., பொதுச்செயலராக நியமிக்கப் பட்டுள்ள சசிகலா, சென்னை, ராயப்பேட்டை,

@nextcolumn@ அவ்வை சண்முகம் சாலையில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகி களை சந்தித்து வருகிறார். இரண்டாவது நாளாக நேற்று, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாத புரம், சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளை, அவர் சந்தித்தார்.

இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு, ஜெயலலிதா வரும்போது, அவரை வரவேற்க, கட்சியினர் திரண்டு வருவர்; தாரை தப்பட்டை முழங்க, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பர். அதே போன்ற வரவேற்பும், ஆதரவும், தற்போது சசிகலாவுக்கும் இருப்பதாக காட்ட, ஆண்களும், பெண்களும் பணம் கொடுத்து, அழைத்து வரப்படுகின்றனர்.

நேற்று அந்த பெண்கள், கட்சி அலுவலகம் உட்புறம், வரிசையில் நிறுத்தப்பட்டனர். இவர்களில், பெரும்பாலானோர் மூதாட்டிகள்.

@nextcolumn@ காலை, 10:45 மணிக்கு சசிகலா வந்தார். அவர் கார் உள்ளே நுழைந்ததும், அங்கு கூடியிருந்த பெண்கள், சசிகலாவை வாழ்த்தி கோஷமிட்டனர். சசிகலா அலுவலகத்தின் முதல் மாடிக்கு சென்று, 'போர்டிகோ'வில் நின்று, அவர்களை பார்த்து, இரட்டை விரலை காட்டினார்.

அவர் உள்ளே சென்றதும், அழைத்து வரப்பட்ட பெண்கள் வெளியேற முயன்றனர்; போலீசார் தடுத்து நிறுத்தினர். சசிகலா செல்லும் வரை, உள்ளேயே இருக்கும்படி வலியுறுத்தினர். அதைஏற்றுக் கொள்ள மறுத்த பெண்கள், போலீசாரை மீறி வெளியேற முயன்றனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதற்கு இடையில், எம்.ஜி.ஆர்., சிலையை சுற்றி போடப்பட்டிருந்த, தடுப்பைத் தாண்டி, பெண்கள் வெளியேறினர். அதை பத்திரிகையாளர்கள், புகைப்படம் எடுத்தனர். உடனே போலீசார், பெண்களை வெளியேற அனுமதி அளித்தனர்.

கட்சி அலுவலகத்திற்கு வெளியே வந்ததும், அந்த பெண்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டனர்; பின், அழைத்து வந்த நிர்வாகிகள், தலா, 200 ரூபாய், அவர்களுக்கு வழங்கினர். சில பெண்கள் பணம் போதாது எனக் கூறி, சண்டை போட்டனர்; பணம் கிடைத்ததும், கிளம்பிச் சென்றனர்.

இதைப் பார்த்த பொதுமக்கள், 'இவர்களுடைய இம்சை தாங்கவில்லை; இப்படி தான் கூட்டம் சேர்க்கின்றனரோ...' எனக் கருத்து தெரிவித்தபடி, அ.தி.மு.க., அலுவலகத்தை கடந்து சென்றனர். - நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us