அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.,வை சந்தித்தார் ராகுல்
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.,வை சந்தித்தார் ராகுல்
UPDATED : அக் 09, 2016 06:01 AM
ADDED : அக் 07, 2016 11:30 PM

சென்னை:முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் குறித்து விசாரிக்க, காங்கிரஸ் துணைத் தலை வர் ராகுல், அப்பல்லோ மருத்துவ மனைக்கு வந்து சென்றது, அரசியல் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
@Image@முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால், செப்., 22ல் சென்னை, அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க, காங்கிரஸ் துணைத் @nextcolumn@ தலைவர் ராகுல், நேற்று வருவதாக, தகவல் வெளியானது; போலீசார் குவிக்கப்பட்டனர்.
டில்லியில் இருந்து, தனி
விமானத்தில் புறப்பட்ட ராகுல், காலை, 11:30 மணிக்கு, சென்னை விமான நிலையம்
வந்தார். காலை, 11:50 மணிக்கு, அப்பல்லோ மருத்துவமனை வந்தார்.
அவருடன், தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசரும் வந்தார். ராகுலை, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர் கள், மருத்துவமனை நிர்வாகிகள் வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்றனர்.
முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, மருத்துவர்கள் விளக்கினர். முதல்வரை சந்தித்த பின், பகல், 12:25 மணிக்கு, ராகுல், மருத்துவ மனை யில் இருந்து புறப்பட்டார். மருத்துவமனைக்கு வெளியே, அவர் நிருபர்களிடம் கூறும் போது, ''முதல்வர் ஜெயலலிதாவுக்கு என் ஆதரவையும், காங்கிரஸ் ஆதரவையும் தெரிவிப்பதற்காக,
டில்லியில் இருந்து வந்தேன்.ஜெயலலிதா @nextcolumn@குணமடைந்து வருகிறார்; அவர் முழு
ஆற்றலுடன், விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்,'' என்றார்.
சில
தினங்களுக்கு முன், 'ஜெயலலிதா விரை வில் நலம் பெற வேண்டும்' என,
'டுவிட்டரில்' ராகுல் வாழ்த்து தெரிவித்திருந் தார். நேரில் வரும் தகவல்,
அவர், சென்னை விமான நிலை யத்திற்கு வந்திறங்கிய போது தான், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது.
முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க, ராகுல் திடீ ரென வந்து சென்றது, அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக, தி.மு.க., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
