ADDED : ஆக 01, 2011 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இந்தியாவுக்கான, எல் சல்வாடார் நாட்டு தூதர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியாவுக்கான, எல் சல்வாடார் நாட்டு தூதர் ரூபன் இக்னாசியோ ஜமோரா ரிவாஸ், முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தார். சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்றதற்காகவும், தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றதற்காகவும் அவர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், தமிழகத்துடன் வர்த்தக உறவுகள் வைத்துக் கொள்ள தங்களது நாடு விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, எல் சல்வாடார் நாட்டு தூதரக அதிகாரி யஷ்வந்த் குமார் வெங்கட்ராமன் உடனிருந்தார்.