ADDED : செப் 17, 2011 10:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஈ.வெ.ரா.,வின் 133வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அவரது சிலைக்கு, முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மலர் தூவினார்.
தொடர்ந்து, அமைச்சர்கள் பன்னீர் செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், செந்தமிழன், சி.வி.சண்முகம், முகமது ஜான், பச்சை மால், கோகுல இந்திரா, சின்னையா, செல்வி ராமஜெயம் உள்ளிட்டோர் மலர் தூவி, மரியாதை செலுத்தினர். தி.மு.க., தலைவர் கருணாநிதி, சிந்தாதிரிப்பேட்டை அருகில் உள்ள ஈ.வெ.ரா., சிலைக்கு, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில், ஈ.வெ.ரா., படத்துக்கு மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.