அடகு வைத்த நகைகளை திருப்பி கேட்டு முத்தூட் மினி நிறுவனம் முன் மறியல்
அடகு வைத்த நகைகளை திருப்பி கேட்டு முத்தூட் மினி நிறுவனம் முன் மறியல்
ADDED : செப் 26, 2011 08:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : கொள்ளை நடந்த திருப்பூர் முத்தூட் மினி நகை அடகு நிறுவனத்தில், நகை அடகு வைத்தவர்கள், நகைகளை திருப்பி தரக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.முத்தூட் மினி நகை அடகு நிறுவனத்தில், 24ம் தேதி கொள்ளை நடந்ததையடுத்து, நகை அடகு வைத்த பொதுமக்கள், நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.
விசாரணை நடந்து கொண்டிருந்ததால், பொதுமக்களை போலீசார் அனுமதிக்கவில்லை; இரண்டு நாட்களாக நிறுவனமும் செயல்படவில்லை. நகைகளை அடகு வைத்த பலர், தங்களது நகைகளை உடனடியாக திருப்பி தர வேண்டும் எனக் கோரி, காலை, முத்தூட் மினி நகை அடகு நிறுவனத்தை முற்றுகையிட்டனர்; நிறுவன ஊழியர்கள் முறையாக பதில் அளிக்காததால் அதிருப்தியடைந்த அவர்கள் திருப்பூர் - காங்கயம் ரோட்டில், முத்தூட் நிறுவனம் முன், மறியலில் ஈடுபட்டனர்.

