sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கால்நடை ஆராய்ச்சி கட்டடங்கள்:வீடியோகான்பரன்சில் ஜெ., திறப்பு

/

கால்நடை ஆராய்ச்சி கட்டடங்கள்:வீடியோகான்பரன்சில் ஜெ., திறப்பு

கால்நடை ஆராய்ச்சி கட்டடங்கள்:வீடியோகான்பரன்சில் ஜெ., திறப்பு

கால்நடை ஆராய்ச்சி கட்டடங்கள்:வீடியோகான்பரன்சில் ஜெ., திறப்பு


ADDED : அக் 04, 2011 11:21 PM

Google News

ADDED : அக் 04, 2011 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மூன்று மாவட்டங்களில், கால்நடை மற்றும் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி கட்டடங்களை, வீடியோகான்பரன்ஸ் முறையில் முதல்வர் ஜெயலலிதா, நேற்று முன்தினம், துவக்கி வைத்தார்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.

கால்நடை, கோழியினம் மற்றும் மீன் வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்களை மாவட்ட அளவில் அனைத்து பண்ணையாளர்களான விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி, அவற்றைக் கையாண்டு பயன்பெற வழிவகுப்பதே இவற்றின் பணி.பெரும்பாலான பல்கலைக்கழக பயிற்சி மையங்கள், இதுவரை வாடகை கட்டடத்திலேயே இயங்கி வந்தன. திண்டுக்கல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய கட்டடம், 71 சென்ட் நிலத்தில் 29 லட்சம் ரூபாய்; தஞ்சாவூர் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய கட்டடம், ஒரு ஏக்கரில் 48 லட்சம் ரூபாய்; திருவாரூர் உழவர் பயிற்சி மையக் கட்டடம், 85 சென்ட்டில் 26 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயில் கட்டப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us