UPDATED : அக் 06, 2011 02:24 PM
ADDED : அக் 06, 2011 02:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை: வால்பாறை அருகே காட்டெருமை தாக்கி பெண் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த பழைய வால்பாறையில் உள்ள காப்பிக்காட்டில் தொழிலாளர்கள் வழக்கம் போல் காப்பி பழம் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விஜயா (47) என்ற பெண் தொழிலாளியை, அங்கு நின்று கொண்டிருந்த காட்டெருமை திடீரென தாக்கியது. இவர் அவரது இடுப்பு, கை, கால் பகுதிகளில் கடுமையான காயமடைந்து, எஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

