sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 04, 2026 ,தை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அந்தமான், துபாய்க்கு பயணமாகும் ராமேஸ்வரம் "புரொப்பல்லர்'

/

அந்தமான், துபாய்க்கு பயணமாகும் ராமேஸ்வரம் "புரொப்பல்லர்'

அந்தமான், துபாய்க்கு பயணமாகும் ராமேஸ்வரம் "புரொப்பல்லர்'

அந்தமான், துபாய்க்கு பயணமாகும் ராமேஸ்வரம் "புரொப்பல்லர்'


ADDED : அக் 05, 2011 01:18 AM

Google News

ADDED : அக் 05, 2011 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமேஸ்வரத்தில் தயாராகும் 'புரொப்பல்லர்' அந்தமான், துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடையும் பொருட்களöல்லாம் கண்ணுக்கு தெரியும் வேளையில், அதற்கு புலப்படாமல், பயணத்தை தொடர வைக்கிறது 'புரொப்பல்லர்.' விசைப்படகு, நாட்டுப்படகிற்கு இதுவே உயிர் நாடி. இவன் சுழன்றால் தான் உலக உலா வர முடியும். 'இன்ஜின்' குதிரை சக்திக்கு ஏற்ப 10 கிலோவிலிருந்து 100 கிலோ எடையிலான புரொப்பல்லரை பயன்படுத்துகின்றனர் மீனவர்கள். ஆனால் இதன் பிறப்பிடம் ராமேஸ்வரம்; புரொப்பல்லர் தயாரிப்புக்கு பெயர் போனது. 'கன் மெட்டலை' மொத்தமாக வாங்கி வந்து, உருக்குகின்றனர்.

தேவைக்கேற்ற அளவுகளில் உள்ள 'டை செட்'டில் ஊற்றி 'ரா' மெட்டலாக உருவாக்கப்படுகிறது. அதில் நிக்கல் முலாம் கலவை ஊற்றப்பட்டு, லேத்தில் கடையப்பட்டு 'பளிச்'சென தயாரிக்கப்படுகிறது. கடையப்பட்ட 'புரொப்பல்லர்' கிலோ 280 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது. ராமேஸ்வரத்தை சேர்ந்த ஜே.எம்.ஜே.மெட்டல்ஸில் இது தயாரிக்கப்படுகிறது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள திருப்போனதரையில் உள்ள அண்ணன், தம்பி நான்கு பேர் இதை நிர்வகித்து வருகின்றனர்.

இது குறித்து இதன் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான யு.மஜூர்ஜான் கூறியதாவது: வாங்கி செல்பவருக்கு மன திருப்தி இருந்தால், எந்த பொருளுக்கும் கிராக்கி இருக்கும். நாங்கள் தயாரிக்கும் 'புரொப்பல்லரை' வாங்க சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி. ஜெகதாபட்டனம், கோட்டை பட்டினம், மல்லி பட்டினம், தொண்டி, அந்தமான், துபாய் போன்ற பகுதிகளிலிருந்து வருகிறார்கள். ஓராண்டு வாரண்டி கொடுக்கிறோம்.ஒரு 'புரொப்பல்லர்' தயாராக ஒரு நாள் ஆகும். ராமேஸ்வரத்தில் செய்கின்ற தெளிவு வேறு எங்கும் இருக்காது. நாட்டு படகுக்கும் செய்து கொடுக்கிறோம். புரொப்பல்லரின் வேலை இன்ஜினை 'மூவ்' செய்வதாகும். விமானத்துக்கு காற்றாடி போன்று விசைப்படகுக்கு இது முக்கியம், என்றார்.






      Dinamalar
      Follow us