உள்ளடக்கத்திற்கு செல்ல

தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
ADDED : செப் 03, 2026 05:25 AM

அ நிறம் | அளவு
சென்னை: சட்டசபையில், நேற்று 110 விதியின் கீழ், முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் அறிவிப்புகளை வாசித்தபோது, தி.மு.க., -- எம்.எல்.ஏ., ஆஸ்டின் எழுந்து, சட்டசபை விதிகள் புத்தகத்தில், ஒரு பக்கத்தை காண்பித்து, சபையில் பேச வாய்ப்பு கேட்டார். அவரை, சபாநாயகர் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து ஏதோ கூறியபடி நின்று கொண்டிருந்தார்.
அமைச்சர்கள், த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று, அவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், முதல்வர் தனது பேச்சை நிறுத்தினார். அதைத் தொடர்ந்து, ஆஸ்டின் மீது நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் எச்சரித்தார்.
இதையடுத்து, எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு, எதிர்க்கட்சி துணைத்தலைவர் கே.என்.நேரு ஆகியோர், ஆஸ்டினை அமர செய்தனர். இதனால், சட்டசபையில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.
