தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ரூ.6,000 கோடி!தமிழக மின் வாரியத்திற்கு வர வேண்டிய தொகை போச்சு* 'உதய்' திட்டத்தில் தமிழகம் சேர மறுத்ததால் இழப்பு

ரூ.6,000 கோடி!தமிழக மின் வாரியத்திற்கு வர வேண்டிய தொகை போச்சு* 'உதய்' திட்டத்தில் தமிழகம் சேர மறுத்ததால் இழப்பு

ரூ.6,000 கோடி!தமிழக மின் வாரியத்திற்கு வர வேண்டிய தொகை போச்சு* 'உதய்' திட்டத்தில் தமிழகம் சேர மறுத்ததால் இழப்பு


UPDATED : ஏப் 20, 2016 01:05 AM

ADDED : ஏப் 20, 2016 12:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 20, 2016 01:05 AM ADDED : ஏப் 20, 2016 12:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள, 'உதய்' திட்டத்தில் தமிழக அரசு சேராததால் தமிழ்நாடு மின் வாரியம் கேட்ட 6,000 கோடி ரூபாய் கடனை வழங்க, மத்திய அரசின் 'பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' நிறுவனங்கள் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

@Image@தமிழ்நாடு மின் வாரியத்திற்கு மின் கட்டணம், அரசு மானியம் போன்றவற்றின் மூலம் வருவாய் கிடைக்கிறது. இது ஊழியர்கள் சம்பளம், எரிபொருள் உள்ளிட்டவற்றிற்கு செலவு செய்யப் படுகிறது. மின் நிலையம், மின் வழித்தடம் அமைப்பதற்கான நிதி கிடைக்காமல் மாநில மின் வாரியங்கள் சிரமப்பட்டு வந்தன.

மத்திய அரசு உதவி: தற்போது வருவாயை விட செலவு அதிகம் உள்ளதால் அதை சமாளிக்க வங்கிகள் மற்றும் மத்திய அரசு நிதி நிறுவனங்களிடம் இருந்து தமிழக மின் வாரியம் கடன் வாங்குகிறது.

இதை தவிர்க்க மத்திய அரசு, 'பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' ஆகிய நிறுவனங்கள் மூலம் மின் வாரியத்திற்கு கடன் வழங்கி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு மின் @nextcolumn@வாரியம் 2015 - 16 ஆண்டின் வருவாய் இழப்பை சமாளிக்க, மத்திய அரசின், 'பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்' நிறுவனத்திடம் 3,000 கோடி ரூபாய் கடன் கோரியது.

'ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' நிறுவனத்திடமும் 3,000 கோடி ரூபாய் கடன் கேட்டு மின் வாரியம் விண்ணப்பித்தது. ஆனால் அந்த நிறுவனங்கள், கடனை வழங்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின் வாரியம், கடந்த நிதியாண்டின் வருவாய் இழப்பை சமாளிக்க, பவர் பைனான்ஸ் நிறுவனத்திடம், 3,000 கோடி ரூபாய் கடன் கேட்டது. இதற்கான அனைத்து விவரங்களும், அந்த நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. 3,000 கோடி ரூபாயை நீண்ட கால கடனாக வழங்க, பவர் பைனான்ஸ் நிறுவனம், 2015 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது.கடனை பெற்ற பின், முதல் மூன்று ஆண்டுகளுக்கு, மின் வாரியம் கடனை திரும்ப செலுத்த தேவையில்லை. அதன்பின், ஏழு ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.



நிராகரிப்பு:ஆனால், கடன் வழங்க ஏற்கனவே ஒப்புதல் தெரிவித்த, 'பவர் பைனான்ஸ்' நிறுவனம், தற்போது மறுத்துவிட்டது.'ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' நிறுவனத்திடம், 3,000 கோடி ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பம், அந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பித்த போது நிராகரிக்கப்பட்டு விட்டது.

இந்த நிறுவனங்கள் கடன் வழங்காததற்கு, தமிழ்நாடு மின் வாரியம், @nextcolumn@மத்திய அரசின், 'உதய்' திட்டத்தில் சேராததே காரணம் என தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முற்றிலும் கோணல்; முழிபிதுங்கும் மின் வாரியம்!: மத்திய அரசு, 'உதய்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2015 செப்., வரை, மின் வாரியங்களின் மொத்த கடனில், 75 சதவீதத்தை, மாநில அரசுகள் ஏற்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் அந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு மின் வாரியம், மூலதன செலவிற்கு வாங்கிய கடன், 38 ஆயிரத்து, 250 கோடி ரூபாய்; வருவாய் செலவிற்கான கடன், 43 ஆயிரத்து, 540 கோடி ரூபாய் என, 81 ஆயிரத்து, 790 கோடி ரூபாய் அளவிற்கு கடன் உள்ளது.

ஏற்கனவே, மாநில அரசு நிதி நெருக்கடியில் உள்ளதால் மின் வாரிய கடனில், 17 ஆயிரத்து, 500 கோடி ரூபாயை மட்டும் ஏற்று கொள்ள, தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்கு, 25 சதவீத மானியம் கேட்டதுடன், மின் கட்டணத்தை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கும் நிபந்தனையை தளர்த்துமாறு மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், அதை மத்திய அரசு ஏற்காததால், தமிழக அரசு, 'உதய்' திட்டத்தில் இணையவில்லை என தெரிகிறது.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us