நகை வாங்கியோருக்கு விரைவில் 'நோட்டீஸ்!' பட்டியல் தயாரிக்கிறது வருமான வரித்துறை
நகை வாங்கியோருக்கு விரைவில் 'நோட்டீஸ்!' பட்டியல் தயாரிக்கிறது வருமான வரித்துறை
UPDATED : நவ 23, 2016 03:33 AM
ADDED : நவ 21, 2016 11:18 PM

நகைக் கடைகளில், நவ., 8ம் தேதி இரவு, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்கிய, நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்ப முடிவு செய்துள்ளது.
@Image@கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாக, 'பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, பிரதமர் மோடி, நவ., 8ம் தேதி, இரவு, 8:00 மணிக்கு அறிவித்தார்.
அது, ஏராளமான பணத்தை, வருமான கணக்கில் காட்டாமல் இருந்தவர்களின் வயிற்றில் புளியை கரைத்தது. அதனால், தங்களிடம் உள்ள பணத்தை உடனே மாற்ற, வழி தேடினர்.
@nextcolumn@
நள்ளிரவு வரை
அவர்களில் பலர், இரவோடு இரவாக, தங்களிடம் உள்ள பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம்,தங்க நகைகளை வாங்கி குவித்தனர். அதனால், அன்று இரவு, 8:00மணிக்கு பின், நகைக் கடைகளில், வழக்கத்திற்கு மாறாக, விற்பனை அதிகரித்தது. வழக்கமாக, 9:30 மணிக்கு மூடப்படும் பல நகைக் கடைகள், அன்று நள்ளிரவு வரை இயங்கின.
இதையறிந்த வருமான வரித்துறையினர், நவ., 11ல், சென்னை, பாரிமுனை, என்.எஸ்.சி., போஸ் சாலையில் உள்ள, எட்டு நகைக் கடைகளில், அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில், அங்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பது தெரிய வந்தது.
பல லட்சம் ரூபாய்க்கு நகைகள்
இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னை, பாரிமுனையில் உள்ள நகைக் கடைகளில், நவ., 8ம் தேதி இரவு, பலர், அதிகளவில் தங்க நகைகள் வாங்கியது தெரிய வந்துள்ளது. அவர்களில், 'பான்' கார்டு இன்றி, சிலர் நகைகளை வாங்கி குவித்துள்ளனர். சிலர், பல லட்சம் ரூபாய்க்கு @nextcolumn@நகைகள் வாங்கியது போல, கணக்கு காட்டப்பட்டு உள்ளது.
அவர்களின் விபரங்களை, நகைக் கடைகளில் பதிவான, கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் கடையில் உள்ள ஆவணங்கள் மூலமாக திரட்டியுள்ளோம். தவறு செய்ததாக கண்டறியப்பட்டுள்ள, நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு, விளக்கம் கேட்டு, விரைவில், 'நோட்டீஸ்' அனுப்ப உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -
